வியாழன், 4 மே, 2017

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு May 03, 2017

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு


தமிழக விவசாயிகள் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன என்று, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பாராட்டும் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கில் 3 தினங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை பற்றி விவசாயிகளுக்கு தெரியுமா என்றும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதா என்றும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது. 

மேலும், விவசாயிகள் எளிதில் அணுகும் வகையில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் நரசிம்மா, தமிழகத்தின் 32 மாவட்டங்களில் தகவல் மற்றும் விழிப்புணர்வு மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.  

உச்சநீதிமன்றம் தெரிவித்த ஆலோசனைகளை மறுக்காமல் ஏற்றுக்கொண்டதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  விவசாயிகள் தற்கொலையை தாங்கள் மறுக்கவில்லை என்று வாதிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர் நரசிம்மா, தற்கொலை தமிழகத்தில் மட்டுமே நடக்கவில்லை என்றும் இந்தியா முழுவதுமே நடப்பதாகவும் தெரிவித்தார். 

உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்பட்டதால் தற்கொலை நடப்பதாகவும் அதனைக் களைய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நரசிம்மா தெரிவித்தார். இதையடுதது வழக்கு மீண்டும் வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts: