வியாழன், 4 மே, 2017

பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி May 04, 2017

பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரிய மனு தள்ளுபடி


நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாஜகவின் டெல்லி பிரிவு செய்தித் தொடர்பாளரான அஷ்வினி உபாத்யாயா என்பவர், பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். தேசிய ஒற்றுமைக்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு இந்தியின் வளர்ச்சிக்கு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Posts: