அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில், கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நாள்தோறும் தலை குளிக்க வேண்டும். முதல் நாள் தண்ணீரில் ஊறவைத்த சீரகம், வெந்தயத்தை மறுநாள் காலையில் எடுத்துக் கொள்ளலாம்.
காலையில் நீராகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். செயற்கை குளிர்பானங்கள், தேநீர் போன்றவற்றிற்கு பதிலாக மோர், எலுமிச்சை சாறு, பானகம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
கார உணவு, கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவு, எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் ஆகியவற்றைத் தவிர்த்து, காரத்திற்கு மிளகு, இஞ்சி பயன்படுத்த வேண்டும்.
மதிய உணவில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் கீரைகள், நீர்ச்சத்து மிக்க பீர்க்கங்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் எடுத்துக் கொள்ளும் அளவு மாறுபடும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தண்ணீருக்கு பதிலாக பானையில் வைத்து நீர் அருந்தலாம். வெயில் காலத்தில் பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும். பிற வகை ஆடைகளை வியர்வை உறிஞ்சாது என்பதால், சருமத்தில் வியர்வை தேங்கி, வியர்வைக்குரு வரும்.
வெள்ளரிப்பிஞ்சு, சீரகம், சிறிதளவு இஞ்சி சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் தாகம் அடங்குவதுடன், கோடை வெப்பமும் தெரியாது. சமையலுக்கு சர்க்கரைக்கு பதில் பனவெல்லமும், சாதாரண உப்புக்கு பதில் கல் உப்பும், சாதாரண புளிக்கு பதில் குடம் புளி பயன்படுத்த வேண்டும்.
வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு அம்மை போன்ற நோய் தாக்கும் அபாயம் இருக்கும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.