கூடங்குளம் இரண்டாவது அணுஉலையின் டர்பணில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகின்றது. இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நடைபெற்ற வந்த நிலையில் இன்று அதிகாலை 3.43 மணிக்கு டர்பணில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி முதலாவது அணு உலையில் எரி பொருள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அணு உலையிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் இரண்டாயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
முதலாவது அணு உலையில் எரி பொருள் நிரப்பப்பட்டு வரும் நிலையில் வரும் ஜீன் 17 ஆம் தேதிக்கு பிறகே மின் உற்பத்தி துவங்க வாய்ப்புள்ளது என்றும் கூடங்குளம் வளாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.