வெள்ளி, 5 மே, 2017

பொதுமக்கள் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை! May 05, 2017

பொதுமக்கள் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை!


ஒசூர் அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் காட்டுக்குள் செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி வனப்பகுதிக்கு குடிநீர் தேடி யானைகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஊடே துர்கம் வனப்பகுதியில் இருந்து சானமாவு வனப்பகுதியில் 21 யானைகள் முகாமிட்டுள்ளன. ஏற்கனவே அப்பகுதியில் 4 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், மேலும் 21 யானைகள் முகாமிட்டதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால், சானமாவும், ஆழியாளம், போடூர், ராமாபுரம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் காட்டுக்குள் செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆடு மாடுகள் மேய்ப்பவர்கள் சிலநாட்கள் அப்பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக வனப்பகுதிகளில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் யானைகள் கிருஷ்ணகிரிக்கு வருவது அதிகரித்துள்ளது.

Related Posts: