சனி, 6 மே, 2017

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! May 06, 2017




தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை மற்றும் சித்தாரில் 3 சென்டி மீட்டர் மழையும், கொடைக்கானல், பேச்சிப்பாறையில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Related Posts: