மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் பொது நுழைவுத்தேர்வு நாளை (07-05-2017) நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, நீட் பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது.
இந்திய அளவில், இந்த தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். நாடு முழுவதும் 104 நகரங்களில், 2200 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 88 ஆயிரத்து 478 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வு முடிவுகள் ஜூன் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவசர சட்டம் இயற்றப்பட்டதால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு நீட்தேர்வு நாளை தமிழகத்தில் நடைபெற உள்ளது.
ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்களுக்கு சுமார் 2 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ள நிலையில், தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து சுமார் 88 ஆயிரம் பேர் மட்டுமே எழுதுவது குறிப்பிடத்தக்கது.