புதுச்சேரி அரசுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தம்முடைய பதவிக்குரிய கண்ணியத்துடன் நடந்துகொள்ளவில்லை என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நக்மா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, பாஜக பிரதிநிதியாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார்.
மக்கள் நலனுக்காகவே ஆளுநர் செயல்பட வேண்டும் என தெரிவித்த நக்மா, கோப்புக்களை தேக்கி வைப்பதற்காக அல்ல எனவும் குறிப்பிட்டார். புதுச்சேரியில் இலவச அரிசி, ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்த கிரண் பேடி, தடையாக உள்ளார் என்றும் நக்மா புகார் தெரிவித்தார்.
இதனிடையே, புதுச்சேரியை தூய்மை மாநிலமாக மாற்ற ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியை அனைத்து வகையிலும் முதன்மை இடத்திற்கு கொண்டுவருதே தன்னுடைய நோக்கம் என கூறினார்.
ஆட்சியாளர்களிடம் சண்டை போடுவது தன்னுடைய நோக்கமில்லை எனவும் கிரண்பேடி தெரிவித்தார்.