சனி, 6 மே, 2017

விஷவாயு கசிவால் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிப்பு! May 06, 2017

விஷவாயு கசிவால் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதிப்பு!


டெல்லியில் விஷ வாயு கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட 50க்கும்  மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியின் துக்ளகாபாத் எனும் பகுதியில் உள்ள கொள்கலன் ஒன்றில் இருந்து இந்த வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள ராணி ஜான்சி சர்வோதயா கன்யா பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சலும், தொண்டை வறட்சியும் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த போலீசார், வாயு கசிவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Posts: