வெள்ளி, 19 மே, 2017

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட குறைந்த எய்ட்ஸ் நோய் பாதிப்பு! May 19, 2017

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட குறைந்த எய்ட்ஸ் நோய் பாதிப்பு!


தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் பூஜ்ஜியம் புள்ளி மூன்று எட்டு சதவீதத்திலிருந்து பூஜ்ஜியம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதமாக எய்ட்ஸ் பாதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். எய்ட்ஸ் நோயை தடுக்கும் மருந்துகள் ஆய்வுக்கு உறுதுணையாக தமிழக அரசு இருக்கும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். 



இந்த விழாவில் பேசிய மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், எய்ட்ஸ் நோய் புதியதாக எவருக்கும் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசு தீவிரமாக  செயல்படுவதாக தெரிவித்தார். மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை எந்த விதத்திலும் புறக்கணிக்கக்கூடாது என்னும் நோக்கத்தில் மாநில அரசு செயல்படுவதாகவும் கூறினார்.

Related Posts: