புதன், 24 மே, 2017

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் மாயம்! May 24, 2017

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் மாயம்!


அசாம் மாநிலம் தேஸ்பூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் திடீரென மாயமானது.

இந்த சுகோய்-30 ரக போர் விமானத்தில், விமானிகள் இருவர் வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். தேஸ்பூர் அருகே போர் விமானம் பறந்த போது, திடீரென ரேடாரில் இருந்து மாயமானது. சீன எல்லை அருகே விமானம் மாயமாகி உள்ளதால் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சுகோய் விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான AN-32 ரக விமானம் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் சுகோய் 30 ரக விமானம் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts: