வியாழன், 8 ஜூன், 2017

நிலங்களுக்கான சந்தை வழிகாட்டு மதிப்பு நாளை முதல் 33% குறைப்பு June 08, 2017

நிலங்களுக்கான சந்தை வழிகாட்டு மதிப்பு நாளை முதல் 33% குறைப்பு


தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை 33 சதவிகிதம் வரை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 5வது முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பத்திர பதிவு நில வழிகாட்டு மதிப்பை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது.
 
நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டுத் தொகை 33 சதவிகிதம் வரை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. சந்தை மதிப்பு வழிகாட்டியை குறைப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தானம் உள்ளிட்ட ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் 4% ஆக நிர்ணயிக்கப்படுகிறது. 

இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமல்படுத்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை-சென்னை விமானம் தாமதம் காரணமாக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் மட்டும், இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Related Posts: