வியாழன், 8 ஜூன், 2017

4ஜி சேவை வேகத்தில் பாகிஸ்தானுக்கு பிறகே இந்தியா June 08, 2017

4ஜி சேவை வேகத்தில் பாகிஸ்தானுக்கு பிறகே இந்தியா


ரிலையன்ஸின் ஜியோ 4ஜி சேவையை தொடங்கியதிலிருந்து இந்தியாவில் மொபைல் மூலம் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், நமக்கு கிடைக்கும் 4ஜி சேவை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக இருக்கிறது என்று open signal நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

4ஜி சேவையில் இந்தியா நிலை இது தான்..

➤உலகளவில் 4ஜி சேவைக்கான சராசரி வேகத்தில் இந்தியர்கள் அனுபவிப்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே

➤உலகளவில் 4ஜி சேவைக்கான சராசரி வேகம் 16.2 MBPS

➤இந்தியாவில் 4ஜி சேவைக்கான சராசரி வேகம் 5.1 MBPS

➤உலகளவில் 3ஜி சேவைக்கான சராசரி 4.4 MBPS வேகத்தை விட சிறிதளவே அதிகம்

➤வேகமான 4ஜி சேவை பெறுவதில் இந்தியா 74வது இடம் 

➤இந்தியாவை விட பாகிஸ்தான், இலங்கையில் 4ஜி சேவைக்கான வேகம் அதிகம்

➤வேகமான 4ஜி சேவை பெறுவதில் சிங்கப்பூர் முதலிடம்