வியாழன், 8 ஜூன், 2017

காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு June 08, 2017

காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு


ஐ.ஐ.டி. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டிறைச்சி விருந்து நடத்திய மாணவர் சூரஜ் மற்றொரு பிரிவைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்டார். இது குறித்துக் கோட்டூபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஐ.ஐ.டி. மாணவர்கள் அர்ஜூன், ஜெயக்குமார், சாமிநாதன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், இந்த வழக்கை கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரித்தால் உரிய நியாயம் கிடைக்காது எனக் குறிப்பிட்டு இருந்தனர்.
 
இந்த மனு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் எனக் கோரினார். 

இதையடுத்து நீதிபதி, ஐஐடி மாணவர்களின் பாதுகாப்பைக் காவல்துறையினர் உறுதி செய்யவேண்டும் என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Posts: