கத்தாருக்கு முழு ராணுவ உதவி செய்ய தயார் - துருக்கி அறிவிப்பு..
துருக்கி அதிபர் ஏற்தொகானின் கத்தாருக்கு எதிரான சவூதி உள்ளிட்ட நாடுகளின் தடையை நீக்க செய்த மத்தியஸ்தம் தோல்வியடைந்ததை அடுத்து கத்தாருக்கு முழுமையான உதவிகளை புரியப்போவதாக துருக்கி அறிவித்துள்ளது
துருக்கி நாடாளுமன்றத்தில் கத்தாரில் ராணுவ தளம் அமைப்பதற்கான ஓட்டெடுப்பில் பெரும்பான்மை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து கத்தாரின் பாதுகாப்பிற்கு பல ஆயிரம் பேர் கொண்ட துருக்கி படைகள் கத்தாரில் நிலைகொள்ள உள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது ..
ரமலான் மாதத்தில் எந்த ஒரு மனிதாபிமானமும் இல்லாமல் சவூதி அரசு கத்தார் எல்லையை அடைத்து சீல் வைத்த காரணத்தால் பல நூறு உணவு டிரக்குகள் கத்தாருக்கு வரமுடியாமல் தடை பட்டுள்ளன .. இதனால் கத்தாரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது..
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த கத்தார் அரசு துருக்கி மற்றும் ஈரான் தங்களின் உணவுத்தேவைக்கு உதவுமாறு கோரிக்கை விருத்தது.. இதனை ஏற்றுக்கொண்ட ஈரான் மற்றும் துருக்கி உணவு மற்றும் குடிநீரை கத்தாருக்கு கப்பல் மற்றும் விமானம் மூலமாக அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது..
