வியாழன், 8 ஜூன், 2017

5ம் வகுப்புக்கும் வருகிறது பொதுத்தேர்வு! June 08, 2017

5ம் வகுப்புக்கும் வருகிறது பொதுத்தேர்வு!


ஐ.சி.எஸ்.சி  மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு போலவே இனி 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.

ஐ.சி.எஸ்.சி பாடத்திட்டதின் கீழ் படிக்கும் 5ஆம் வகுப்பு, 8ஆம் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிகொள்ள வேண்டும் என ஐ.சி.எஸ்.சி கவுன்சில் தலைவர் கெர்ரி அரத்தோன் கொல்கத்தாவில் அறிவித்தார். இந்த பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் போலவே வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி திருத்தப்படும் என கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் சமஸ்கிரதம், யோகாசனம் ஆகியவை கட்டாய பாடம் ஆக்கப்படும் எனவும், மாணவர்களின் வளர்ச்சியையும், அதனை மதிப்பிட உதவியாகவும் இந்த பொது தேர்வுகள் உதவிகரமாக இருக்கும் எனவும் கூறினார். இவை அனைத்தும் 2018ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என ஐ.சி.எஸ்.சி கவுன்சில் அறிவித்தது.

Related Posts: