வியாழன், 8 ஜூன், 2017

விவசாயிகளின் போராட்டத்தில் வெடித்த வன்முறை! June 08, 2017

விவசாயிகளின் போராட்டத்தில் வெடித்த வன்முறை!


வன்முறை சூழ்ந்து கொண்ட விவசாயிகள் போரட்டம் ஏழாவது நாளாக தொடர்கிறது
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கொடுக்கவும் கடன் தள்ளுபடி செய்ய கோரியும் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா மாநில விவசாயிகள் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


நாட்டிலேயே இரண்டு பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ராவில் பாரதிய ஜனாதி கட்சி ஆட்சி புரிந்து வருகையில், விவசாயிகள்  தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  விவசாய உற்பத்திகள் இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே காணப்பட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படைந்ததால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய விலை அளிக்குமாறும், விவசாய கடன் தள்ளுபடி செய்யுமாறும் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.  

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலைமைச்சர் யோகி ஆதித்யநாத் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மாநில விவசாயிகள் விவாசய கடன்களை தள்ளுபடி செய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, மொத்த விலை வியாபார கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சந்தைகள் மூடப்பட்டிருந்ததால், கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பியபடி பால் மற்றும் காய்கறிகளை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 

தொடர்ந்து வந்த  போராட்டத்தின் ஆறாவது நாள் அன்று, விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மத்திய பிரதேச மாநிலம் மான்ட்சர் பகுதியில் ஏற்பட்ட மோதலில், ஐந்து விவசாயிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து ஏற்பட்ட வன்முறையில், ஆத்திரமடைந்த விவசாயிகள், போலீசரின் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். 

தொடர்ந்து வன்முறை நிலவி வருவதால், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜேனி மற்றும் மான்ட்சர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர 1100 கலவர தடுப்பு போலீசாரை மத்திய அரசு அனுப்பியுள்ளது. 

Related Posts:

  • Money Rate - INR Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit … Read More
  • Salah Time - Pudukkottai Dist only Read More
  • நபிமொழி ‘அஜ்வா’ பேரீச்சம்பழம் சொர்க்கத்தி(ன் பேரீச்சம்பழங்களி)ல் உள்ளதாகும். அதில் விஷக்கடிக்கு நிவாரணம் உள்ளது. சமையல் காளான் ‘மன்னு’ வகைய… Read More
  • சவூதி வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு : சவூதி வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு : வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிவிப்பு....!! உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமா… Read More
  • மவ்லிது بِسْمِ اللّهِ الرَّحْمـنِ الرَّحِيمِ மௌலூது மாதம் வந்து விட்டது, அவுலியாக்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், வீட்டில் பரக்கத் ஏற்படும் என்ற த… Read More