சனி, 17 ஜூன், 2017

500 ஆண்டுகள் பழமையான குளத்தை தூர்வாரிய கிராமத்து இளைஞர்கள்! June 16, 2017

500 ஆண்டுகள் பழமையான குளத்தை தூர்வாரிய கிராமத்து இளைஞர்கள்!


நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத 500 ஆண்டு பழமையான குளத்தை, கிராம இளைஞர்கள் தூர்வாரினர். தற்போது அங்கு தண்ணீர் நிறைந்துள்ளதால் அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தின் முகப்பில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குளம் உள்ளது. கடந்த காலங்களில் இந்தக் குளமானது முத்துப்பட்டி கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த நிலையில், குளத்தை கடந்த சில ஆண்டுகளாக சரியாக பராமரிக்கவில்லை என கூறப்படுகிறது. 

மேலும், கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதை அறிந்த அவ்வூர் இளைஞர்கள், குளத்துக்கு வரும் வரத்துக் கால்வாய்கள், குளத்தை சுற்றி படர்ந்திருந்த முட்புதர்களையும் JCB வாகனத்தை கொண்டு சுத்தம் செய்தனர். 

இந்நிலையில், அண்மையில், பெய்த மழையால் குளத்தின் மடையில் தண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அதனால், இளைஞர்கள், ஒருவருக்கொருவர் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

Related Posts: