பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த அரசின் முதலமைச்சராக இருக்கும் வரை சி.ஏ.ஏ, என் ஆர் சி, என்பிஆர் அமல் படுத்த மாட்டேன் என அறிவித்ததை போன்று தமிழக முதல்வர் எடப்பாடியும் அறிவிக்காவிட்டால் தங்களது ஜனநாயக வழியிலான போராட்டம் தொடரும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தெற்கு வீதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்கூட்டம் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர் காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவி விட்டார்கள் இந்திய படைகள் போரிட்டு காப்பாற்றினார்கள் எனக்கூறி சொந்த நாட்டு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தி 40 இந்திய நாட்டு ராணுவ வீரர்களை நரேந்திர மோடி தனது சொந்த லாபத்திற்காக பறிகொடுத்த நாள் இன்று.
நமது அண்டை மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் இந்த அரசின் முதலமைச்சராக இருக்கும் வரை சி.ஏ.ஏ, என் ஆர் சி, என்பிஆர் அமல் படுத்த மாட்டேன் என ஒரு சிங்க தமிழனாக அறிவித்ததை போன்று தமிழக முதல்வர் எடப்பாடியும் அறிவிக்காவிட்டால் எங்களது ஜனநாயக வழியிலான போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
credit ns7.tv