செவ்வாய், 6 ஜூன், 2017

சவுதி அரேபியாவுக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது!

தோகா: சவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் கத்தாருடனான தொடர்பை துண்டிப்பதாக அறிவித்ததையடுத்து கத்தார் அரசு இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கத்தார் நாட்டுடனான தூதரக உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளன. மேலும் கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்களும் தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளன.
கத்தாரில் இருந்து தூதர்களை 48 மணிநேரத்தில் திரும்பப்பெறப் போவதாக தெரிவித்துள்ள பஹ்ரைன் அரசு, அங்குள்ள கத்தார் மக்களையும் வெளியேற ஆணையிட்டுள்ளது. மேலும் கத்தாரில் உள்ள தங்கள் நாட்டு மக்களும் நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது.
http://tamil.oneindia.com/news/international/qatar-has-stopped-flights-saudi-arabia/articlecontent-pf243576-285011.html



Related Posts: