ஆதார் எண் எந்த வகையிலும் தனிமனித உரிமைக்கு பாதுகாப்பில்லை என்பதை அறிந்து கொள்ளவும்.
மோடி கொடுத்த ஆதார் யாருக்கு பயன்படுதோ இல்லையோ மோசடி கும்பலுக்கு நல்லா பயன்படுது..
அந்த வகையில் தற்போது மேலும் ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, வங்கி வாடிக் கையாளர்களுக்கு போன் செய்யும் நபர்,
“நான் வங்கி அதிகாரி பேசுகிறேன்.உங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை நீங்கள் இதுவரை இணைக்க வில்லை.
இன்றைக்குள் இணைக்காவிட்டால் உங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படும்.
எனவே, உங்களது ஆதார் எண்ணை தெரிவியுங்கள். நானே வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து விடுகிறேன்” என்று கூறுவார்.
தொடர்ந்து ‘செல்போனில் எண் 1-ஐ அழுத்தவும்’ என்பார். அழுத்தியவுடன் ‘ஆதார் எண்ணை பதிவு செய்யவும்’ என்று குறிப்பிடுவார்.
பிறகு ஒரு ஒன் டைம் பாஸ் வோர்ட் உங்கள் மொபைலுக்கு வரும். அந்த எண் என்ன? ’ என்று கேட்பார்.
அந்த எண்ணை தெரிவித்தவுடன் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடிவிடுவார்.
இந்த வகையான மோசடி தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
http://kaalaimalar.in/robbery-with-aathar-cards/