மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தற்போது மாடுகள் விற்பனைக்கு கட்டுபாடுகள் விதித்துள்ளது. இது மாட்டுக்கறி சாப்பிடுவோர் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கும் இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு அடுத்த அதிரடி நடவடிக்கைக்கு தயாராக உள்ளது. அதாவது விவசாயிகளுக்கான மானியம் இனிமேல் ரத்து செய்யப்படும். புட் கார்ப்பரேசன் மூலம் குடோன்களில் உணவு பொருள் சேமித்து வைக்கப்படாது.
2017 பிறகு ரேசன் கடைகளில் அரிசி வினியோகம் இருக்காது என கூறப்படுகிறது. அரிசியை பொதுமக்கள் பொது சந்தையில்தான் வாங்கி கொள்ள வேண்டும். ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும். அதற்கு பதிலாக சிலிண்டருக்கு கொடுப்பது போல அரிசி உணவு பொருட்களுக்கு பணமாக வழங்கப்படும். இனிமேல் ஏழைகளுக்கு குறைந்த விலையில் அரிசி கிடைக்க வாய்ப்பு இல்லை.
இதற்காகத்தான் தற்போது ஆதார் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்யாது. இங்கும் அரிசி விளைவிக்கப்படும். வெளிநாட்டில் இருந்தும் அரிசி குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு மானியம் நிறுத்தப்படுவதால் இங்கு விளைவிக்கப்படும் அரிசி அதிக விலைக்கு விற்கப்படும். அதே நேரம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி மிக குறைந்த விலையில் கிடைக்கும். இதன் மூலம் அதிக செலவு காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் தடுமாறுவார்கள்.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்படும் அல்லது தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இது குறித்து உலக வர்த்தக சபையில் மத்திய அரசு கையெழுத்திட்டு உள்ளது. இந்த தகவல் அதிமுக, திமுகவுக்கும் தெரியும். ஆனால் அவர்களும் இது குறித்து வரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://kaalaimalar.in/indian-rice-ban/