வெள்ளி, 23 ஜூன், 2017

மூன்றாம் கட்ட ஸ்மார்ட் நகரங்கள்

தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் உட்பட முப்பது நகரங்கள் மத்திய அரசின் ஸ்மார்ட் நகரத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  

நகரங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கும் ஸ்மார்ட் நகரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே இரண்டு கட்டங்களில் 60நகரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் ஸ்மார்ட் நகரத் திட்டம் செயல்படுத்தப்படும் 30 நகரங்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கைய நாயுடு வெளியிட்டார். அதில் தமிழகத்தில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் ஆகிய நான்கு நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 

இவை தவிரப் புதுச்சேரி, திருவனந்தபுரம், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நகருக்கும் திட்டங்களைச் செயல்படுத்த 5ஆண்டுகளில் ஐந்நூறு கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்கும்.