வெள்ளி, 23 ஜூன், 2017

இனி வியர்வையிலிருந்து மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்! June 23, 2017

இனி வியர்வையிலிருந்து மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்!


உடலில் இருந்து வெளியேறும் வியர்வையைக் கொண்டு மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய தொழிநுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்காக, நமது உடலின் தோலில் ஒட்டிக்கொள்ளும் வகையில் ஒரு சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர். அந்த கருவியானது, நமது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் உள்ள நொதிகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தேவையான எனர்ஜிக்களை உருவாக்கும். 



இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பயோ எனர்ஜி தொழில்நுட்பத்தை விட, இது அதிக ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என அராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த ஆராய்ச்சிகுழு மாணவர் வாங், “மக்களுக்கு எளிதாக பயன்படக்கூடிய வகையில் நாங்கள் இந்த தொழிநுட்பத்தை வடிவமைத்து வருகிறோம். இதன்மூலம், உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது வெளியில் நடைபயனம் மேற்கொள்ளும்போது சுலபமாக தங்களுடைய மொபைல் பொருட்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.



மேலும், மனிதர்களின் உடல்நிலையை கண்காணிக்கும் வகையிலும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆராச்ய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வியர்வையில் இருக்கும் குளுக்கோஸின் தன்மையைக் கொண்டு நம் உடல்நிலையின் தன்மை கண்கானித்துக்கொள்ளலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.