செவ்வாய், 13 ஜூன், 2017

பசு மாடு வாங்க சென்ற தமிழக அரசு அதிகாரிகள் மீது கொலை வெறித் தாக்குதல்!

பசுமாடுகள் வாங்குவதற்காக ராஜஸ்தான் சென்ற தமிழக கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது பசு காவலர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தமிழக கால்நடைத்துறை சார்பாக அரசு அதிகாரிகள் ராஜஸ்தானுக்கு பசு மாடுகள் வாங்க சென்றனர். அரசு அலுவல் நிமித்தமாகவே அரசுக்குரிய வாகனங்களில் அதிகாரிகள் சென்றுள்ளனர். ராஜஸ்தான் சென்ற அதிகாரிகள் 50 பசுமாடுகள் வாங்கி 5 லாரிகளில் ஏற்றிக் கொண்டு தமிழகம் திரும்பியுள்ளனர். 

அப்பொழுது ராஜஸ்தானில் உள்ள பசு காவலர்கள் லாரிகளில் பசுமாடுகளை ஏற்றிக் கொண்டு செல்வதை பார்த்து, லாரிகளையும் அதிகாரிகள் சென்ற வாகனங்களையும் வழிமறித்துள்ளனர். பசு மாடுகளை வாங்குவதற்கான அரசு ஆவணங்களை அதிகாரிகள் காண்பித்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தமிழக அரசு அதிகாரிகள் பசு காவலர்கள் கொலை வெறி தாக்குதலில் ஈடுபடனர். மேலும் அவர்கள் பயணம் செய்த வாகனக்களையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் அரசு தரப்பில் விசாரித்தப்போது, ராஜஸ்தான் போலீசார் விரைந்து செயல்பட தவறியதாகவும் அதனால் 7 காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். 

ராஜஸ்தானில் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளான அரசு அதிகாரிகளை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக கால்நடைத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Posts: