செவ்வாய், 13 ஜூன், 2017

10 கோடி ரூபாய் குற்றச்சாட்டுக்கு தமிமுன் அன்சாரி கண்டனம்! June 13, 2017

10 கோடி ரூபாய் குற்றச்சாட்டுக்கு தமிமுன் அன்சாரி கண்டனம்!


நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வி.கே.சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக தனக்கு 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில தொலைக்காட்சி நடத்திய ரகசிய உரையாடல் ஒன்றில்  கூவாத்தூர் சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது தனக்கு  10 கோடி ரூபாய்  கொடுக்கப்பட்டது என  சரவணன் எம்.எல்.ஏ கூறியுள்ளதாக வெளியான தகவலை கண்டு  கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தான் கூவத்தூர் முகாமுக்கு போகவில்லை என்பது நாடறிந்த செய்தியாகும் என்று கூறியுள்ள தமிமுன் அன்சாரி, அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கேட்டு தனது  அலுவலகத்துக்கு வந்தபோது தங்களிடம் நாகரிகமான முறையில் ஆட்சிக்கான ஆதரவை மட்டும் கேட்டார் என்று கூறியுள்ளார். அவரிடம் தொகுதி மக்களின் நலன் மற்றும் சமுதாய நலன் சார்ந்த கோரிக்கைகளை மட்டுமே முன் வைத்ததாகக் கூறினார். 

சரவணன் எம்.எல்.ஏ-வின் குற்றச்சாட்டை 100 சதவிகிதம் மறுப்பதாக கூறியுள்ள தமிமுன் அன்சாரி இது தொடர்பாக மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts: