வியாழன், 8 ஜூன், 2017

இறைச்சிக்காக மாடுகளை விற்பதை தடைசெய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளை கண்டித்து கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாட்டு இறைச்சிக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று விமர்சித்தார். மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சங்பரிவார் அமைப்புகளின் அடக்கு முறை நிகழ்வுகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த சட்டத்திருத்ததைக் கண்டித்து கேரள சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மட்டுமே ஆதரவளிக்கவில்லை. மற்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது




மனுவை ஏற்க மறுத்த அரசு அலுவலத்திற்குள் மூட்டை பூச்சிகளை அவிழ்த்துவிட்ட மனுதாரர் . 

அமெரிக்காவில் உள்ள அகஸ்டா மாகாணத்திற்கு சொந்தமான அரசு அலுவலகத்தில் மனுவை ஏற்க மறுத்ததால், கோபமுற்ற மனுதாரர், அலுவலக அறைக்குள் மூட்டை பூச்சிகளை அவிழ்த்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகஸ்டா மாகணத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்த வில்லியம்ஸ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் இருக்கும் குடியிருப்பில் மூட்டை பூச்சிகள் தொல்லை காரணமாக அந்த குடியிருப்பின் மேலாளரிடம் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாருக்கு தக்க நடவடிக்கையை எடுக்காமல் புகார் அளித்த வில்லியம்சை அந்த குடியிருப்பில் இருந்து காலி செய்ய சொலியுள்ளார் மேலாளர். இதனால் வீட்டை காலி செய்ய உதவும்படி கோரி அரசு அலுவலகத்தை நாடினார். அவருடைய மனுவை பரிசோதனை செய்த அதிகாரிகள் வில்லியம்சுக்கு உதவ மறுத்துவிட்டனர்.  எனவே, தன் நிலையை கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில், ஒரு பாட்டிலில் மூட்டை பூச்சிகளை கொண்டு வந்து அரசு அலுவலகத்திற்குள் அவிழ்த்துவிட்டுள்ளார். இந்த செயலின் மூலம் மூட்டை பூச்சிகளை அகற்றுவதற்காக அரசு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. 

அரசு அலுவலகத்தின் மற்ற அறைகளுக்கும் மூட்டை பூச்சிகள் பரவியதால், அகஸ்டா சிட்டி ஹாலில் பணிகள் முடங்கியது. 

அரசு அலுவலகத்திற்குள் மூட்டை பூச்சிகளை விட்டதால் வில்லியம்ஸை அகஸ்டா மாகாண போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Posts: