வியாழன், 8 ஜூன், 2017

மத்திய அரசின் உத்தரவிற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்! June 08, 2017




இறைச்சிக்காக மாடுகளை விற்பதை தடைசெய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளை கண்டித்து கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மாட்டு இறைச்சிக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து விவாதிப்பதற்காக கேரள சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில் பேசிய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று விமர்சித்தார். மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சங்பரிவார் அமைப்புகளின் அடக்கு முறை நிகழ்வுகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறினார். 

இந்த சட்டத்திருத்ததைக் கண்டித்து கேரள சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ ஒருவர் மட்டுமே ஆதரவளிக்கவில்லை. மற்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

Related Posts: