செவ்வாய், 20 ஜூன், 2017

முஸ்லிம் #சமுதாயத்துக்கு மட்டும் தான் இது போன்ற வழக்குகள் பதியப்படுகின்றன எனும் போது தமுமுகவை இந்த விஷயத்தில் நாம் விமர்சிக்க மாட்டோம்.

#ஜவாஹிருல்லா கைது குறித்து நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக #PJ அவர்களின் விளக்கம்.
#கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட மக்களுக்காக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தமுமுக சார்பில் #நிதி திரட்டப்பட்டது.
அந்த நிதியைக் கையாடல் செய்ததாக வழக்கு இருந்தால் நாம் கட்டாயம் விமர்சனம் செய்திருப்போம்.
ஆனால் இந்த வழக்கு அத்தகையது அல்ல. இது வேறுவிதமான வழக்காகும்.
#தமுமுக திரட்டிய நிவாரண நிதிக்காக வெளிநாடுகளில் வாழும் இந்திய சகோதரர்களும் நிதி அனுப்பினார்கள்.
அது தான் வழக்கு. அதாவது வெளிநாட்டில் நிதி பெறுவதற்கு #மத்திய_அரசில் அனுமதி பெறவில்லை என்ற காரணத்துக்காகத் தான் இந்த வழக்கு. அதற்காகத் தான் இந்தத் தண்டனை. நமது நாட்டுச் சட்டப்படி இது குற்றம் என்றாலும் இப்படி சட்டத்தை மீறிய அனைவரின் மீதும் இது போல் வழக்கு தொடரப்படவில்லை.
#சாய்பாபா ஆசிரமத்துக்கும் சங்கர மடத்துக்கும் இது போல் பன்மடங்கு நிதி வந்துள்ளது. அது பற்றி #சிபிஐ வழக்கு பதிவு செய்யாது. அந்தக் குற்றம் தெரிந்தே செய்தவை. ஆனால் குறிப்பிட்ட பாதிப்புக்காக மக்கள் அவர்களாக அனுப்பும் போது அதை தமுமுகவினர் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
#சட்டம் யாருக்கும் வளையாது என்றால் நாம் இந்தத் தீர்ப்பை குறை கூற மாட்டோம்.
ஆனால் முஸ்லிம் #சமுதாயத்துக்கு மட்டும் தான் இது போன்ற வழக்குகள் பதியப்படுகின்றன எனும் போது தமுமுகவை இந்த விஷயத்தில் நாம் விமர்சிக்க மாட்டோம்.
அனைவருக்கும் #சமநீதி வேண்டும். அநீதி இழைக்கப்பட்டாலும் அனைவருக்கும் அது போலவே செய்யப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் இந்த வழக்கைப் பதிவு செய்த சிபிஐ யை நாம் கண்டிக்கிறோம்.
மேலதிக விபரங்களுக்கு இனைப்பை பார்வையிடுங்கள் : http://www.onlinepj.com/v…/tmmk_vimarsanam/tmmk_siraivasam/…
நன்றி: #உணர்வு 16:07

Related Posts: