புதன், 6 ஜூலை, 2022

ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள்

 குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களால், உங்களுக்கு எப்போது வேண்டுமானால் ஆபத்து ஏற்படலாம். அப்படியான சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை நீங்கள் பயன்படுத்தினால் உடனே நீக்குங்கள்.

ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை பயன்படுத்தும்போது சில நேரங்களில் நமக்கு ஆபத்து ஏற்படலாம். குறிப்பாக நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படலாம். இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஆப்ஸ்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, அவை பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இத்தகைய ஆப்ஸ்களை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டாலும், இன்னும் சிலர் போனில் இருந்து நீக்காமல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டும் அல்லாது இந்த ஆப்ஸ்கள் 4.8-நட்சத்திர பயனர் மதிப்பீட்டைக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், 50,000-க்கும் மேற்பட்டவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள். பட்டியல் இதோ:

அண்மைச் செய்தி: ‘‘தமிழ்நாட்டில் ஒரு எக்நாத் ஷிண்டே புறப்படுவார்’ – தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை’

1. Document Manager
2. Coin track Loan – Online loan
3. Cool Caller Screen
4. PSD Auth Protector
5. RGB Emoji Keyboard
6. Camera Translator Pro
7. Fast PDF Scanner
8. Air Balloon Wallpaper
9. Colorful Messenger
10. Thug Photo Editor
11. Anime Wallpaper
12. Peace SMS
13. Happy Photo Collage
14. Pellet Messages
15. Smart Keyboard
16. 4K Wallpapers
17. Original Messenger


source https://news7tamil.live/remove-dangerous-android-apps-immediately.html

Related Posts: