வியாழன், 1 ஜூன், 2017

மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம்! June 01, 2017

மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம்!


இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை தடை செய்த மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுப்பட்டனர். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாதி ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டு இறைச்சியை தடை செய்ததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தனி மனித உணவு உரிமையில் மத்திய அரசு தலையிட கூடாது என்றும், மாட்டை வைத்து பாஜக அரசு அரசியல் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.  மாட்டிறைச்சிக்கான தடையை நீக்காவிட்டால் தொடர்ந்து போராட்டங்கள் தொடரும் எனவும் போராட்ட குழுவினர்  எச்சரிக்கை விடுத்தனர். 

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யும் தடையை நீக்க கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் தஞ்சாவூர் ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய வந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.