கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கல்வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி மீது இந்து சேனா அமைப்பினர் நேற்று தாக்குதல் நடத்த முயன்றனர்.
இதை கண்டித்து திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இதன் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதியில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் இன்று கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் செம்மன்காலை பகுதியில் அமைந்துள்ள இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தின் நினைவு ஸ்தூபியும் உடைக்கப்பட்டுள்ளன. இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.