வெள்ளி, 9 ஜூன், 2017

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை ரத்து செய்யக்கோரிக்கை! June 09, 2017

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை ரத்து செய்யக்கோரிக்கை!


நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்துள்ளது. 

கடந்த மே மாதம் 7ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வுக்கான வினாத்தாள் மொழிவாரியாக மாறுபட்டு இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில்,  தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையால் 12 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது. 

Related Posts: