வெள்ளி, 9 ஜூன், 2017

பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்தால் கிரிமினல் நடவடிக்கை! June 09, 2017

பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்தால் கிரிமினல் நடவடிக்கை!


பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்ட அரிசியை விற்பனை செய்தால் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.

பிளாஸ்டிக் அரிசி கலப்படம் இருக்கிறா என்பதை கண்டறிவதற்காக தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறைவ்தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 485 உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வியாழக்கிழமையில் இருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரிசி கடைகள், அரிசி மண்டி, ரைஸ்மில் போன்ற இடங்களில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் அரிசி கலப்படம் இருப்பின், உடலுக்கு தீமை ஏற்படுத்தும் என்பதால் விற்பனையாளர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களும் பிளாஸ்டிக் அரிசி என்று சந்தேகம் இருந்தால் மூன்று வழிகளில் சோதனை செய்து பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரிசியை நீரில் போடும் போது மிதந்தால், மிதக்கும் அரிசி பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம், அல்லது, அந்த மிதக்கும் பொருளை கடித்தால் உடையாது, அல்லது கொதிக்கும் நீரில் அரிசியை போடும் போது பிளாஸ்டிக் அரிசி உருகிவிடும், இந்த செய்முறை மூலம் கண்டுபிடிக்க முடியும்.

அவ்வாறு சந்தேகம் இருப்பின் பொது மக்கள் 9444042322 என்ற எண்ணில் புகார் செய்யலாம். உணவு பாதுகாப்பு துறை தொடர் கண்காணிப்பில் இருக்கிறது என்றும், மேலும் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: