ஞாயிறு, 11 ஜூன், 2017

மகாத்மா காந்தியை வியாபாரி என விமர்சித்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா! June 11, 2017

மகாத்மா காந்தியை வியாபாரி என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்ததற்கு, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திரமோடி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மகாத்மா காந்தி சிறந்த வியாபாரி என விமர்சித்துப் பேசினார். 

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜுவாலா, இதன் மூலம் தேசத் தந்தையை, பாஜக அவமானப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், அமித்ஷாவின் கருத்து சுதந்திர போராளிகளின் தியாகங்களை அவமதித்து விட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார். 

வர்த்தக நலன்களுக்காக பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக பாஜக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய  ரன்தீன் சுர்ஜூவாலா,  அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

Related Posts: