ஞாயிறு, 11 ஜூன், 2017

திருட்டுச் சம்பங்களில் ஈடுபட்டதில் 90% பெண்கள்: அதிர்ச்சி தகவல் June 11, 2017

திருட்டுச் சம்பங்களில் ஈடுபட்டதில் 90% பெண்கள்: அதிர்ச்சி தகவல்


இந்தியாவிலேயே பாதுகாப்புக்காக காவலர்கள் அதிகம் குவிந்திருக்கும் டெல்லியில் பெண் பிக்பாக்கெட்டுகள் அதிகரித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.. டெல்லியிலுள்ள மெட்ரோ ரயில் நிறுத்தங்களில் நடைபெறும் பெரும்பாலான திருட்டுச் சம்பவங்களில் பெண்களின் கைவரிசையில் தான் அரங்கேறுகிறது எனும் அதிர்ச்சி தகவலை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பெண் திருடர்கள் - ஜாக்கிரதை 

➤2017ம் ஆண்டு டெல்லி மெட்ரோ நிலையங்களில் நடைபெற்ற திருட்டுச் சம்பங்களில் ஈடுபட்டதில் 90% பெண்கள் ஆவர்.

➤பிக்பாக்கெட் சம்பவங்களில் சிக்கிய 373 திருடர்களில் 329 பெண்கள் ஆகும்.

➤ஜூன் 2ம் தேதியன்று அதிகபட்சமாக 21 பெண் பிக்பாக்கெட்டுகள் கைது செய்யப்பட்டனர். 

➤2016ம் ஆண்டைக் காட்டிலும் பெண்களால் அரங்கேற்றப்படும் திருட்டுச் சம்பவங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 

➤2016 - பிக்பாக்கெட் சம்பவங்களால் கைது செய்யப்பட்டவர்களில் 438 பேர் பெண்கள் , 41 ஆண்கள்.

➤தொடர்ந்து 4 ஆண்டுகளாக 90% மேலாகப்  திருட்டு சம்பவங்களினால் ஈடுபட்ட பெண்கள் கைது.

➤பெண் திருடர்கள் பொதுவாகக் கும்பலாகவோ அல்லது கைக்குழந்தையுடன் வருவதாகவும் போலீசார் எச்சரித்துள்ளனர். 

Related Posts: