நில வழிகாட்டு மதிப்பை 33 சதவிகிதம் வரை தமிழக அரசு குறைத்திருப்பது, சாதாரண மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாது என, ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் ஹென்றி, பத்திரப்பதிவு வருமானத்தை மட்டும் பெருக்கவே, இந்த திட்டத்தை அரசு அறிவித்திருப்பதாக குறை கூறினார்.
➤சென்னை சேப்பாக்கத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் & முகவர்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹென்றி பேட்டியளித்தார்.
➤தமிழக அரசு வழிகாட்டு மதிப்பை 33% குறைத்ததும், பதிவுக்கட்டணத்தை 4% அதிகரித்தது கபட நாடகம். சாதாரண மக்களுக்கு உதவாது.
➤சில இடங்களில் இட மதிப்பினை விட அதிகமான வழிகாட்டி மதிப்பு உள்ளது. அதனை குறைக்க வேண்டும்
➤சொத்தின் மதிப்பு குறைவதனால் வங்கியில் கடன் பெற்றவர்கள், பெறுபவர்கள் பாதிக்கப்படுவர்.
➤கட்டிடம் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும்போது காப்பீடு செய்தவர்கள் பாதிக்கப்படுவர்.
➤இதுதொடர்பாக அரசு அதிகாரிகள், மக்கள், ரியல் எஸ்டேட் அமைப்பினர் கொண்ட முத்தரப்புக்குழு அமைக்க வேண்டும்
➤பத்திரப்பதிவு வருமானத்தை மட்டும் பெருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம்.
➤ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்பொழுது மேலும் 30% விலை அதிகரித்து கட்டடம் வாங்குபவர்களுக்கு சுமை ஏற்படும்.