திங்கள், 12 ஜூன், 2017

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இனி ஆதார் கட்டாயம்! June 11, 2017




வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, வரும் 1ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என, மத்திய அரசின் நேரடி வரிகள் விதிப்பு வாரியம் அறிவித்துள்ளது. 

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு மட்டுமின்றி, நிரந்தர வருமான வரி கணக்கு எண்ணான பான்கார்டிற்கு விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயம் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் தேவையில்லை என கடந்த வெள்ளியன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவு குறித்து, நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம், வரிகள் விதிப்பு வாரியம் மற்றும் வருமான வரித்துறையினர் அடங்கிய உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்தியதாகவும் மத்திய அரசின் நேரடி வரிகள் விதிப்பு வாரியம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒரு இடைக்கால நிவாரணமே என்றும் மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், வங்கிகளில் பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளுக்கு மக்களுக்கு பான் கார்டு தேவை என்பதால், ஆதார் எண் இல்லாதவர்களுக்கு பான் கார்டு ரத்து செய்யப்படமாட்டது என்றும்  மத்திய வரிகள் விதிப்பு வாரியம் விளக்கமளித்துள்ளது.

Related Posts: