திங்கள், 12 ஜூன், 2017

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி June 12, 2017

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி


நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே மாதம் 7ஆம் தேதி, நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 

இத்தேர்வு வினாத்தாள் ஒவ்வொரு மொழியிலும் வேறுபட்டிருந்ததாகவும், எனவே, நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தாக்கல் செய்த மேல்முறையீடு, உச்சநீதிமன்ற கோடை கால விடுமுறை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.சி.பந்த் மற்றும் தீபக் குப்தா ஆகியோர், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடவும் அனுமதி அளித்தனர். 

மேலும், நீட் தேர்வு தொடர்பாக மற்ற மாநில உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கக் கூடிய வழக்குகளை விசாரிக்க தடை விதித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக சிபிஎஸ்இ, இந்திய மருத்துக் கழகம், மத்திய மற்றும் மாநில அரசு பதிலளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 26ஆம் தேதிக்குள் அறிவிக்குமாறு, சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Related Posts: