திங்கள், 12 ஜூன், 2017

இன்சுலின் மருந்து உட்பட 66 பொருட்களுக்கு வரி விகிதத்தை குறைத்து மத்திய அரசு June 11, 2017


நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின் மருந்து உட்பட 66 பொருட்களுக்கு வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. 

நாட்டில் பல்வேறு வரிகளுக்குப் பதிலாகச் சரக்குகள் மற்றும் சேவை வரி என்கிற பெயரில் ஒரே வரி விதிக்கப்பட உள்ளது. இந்த வரிவிதிப்பு முறை ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இந்த வரிவிதிப்பில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைக் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்குப் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. 

133பொருட்களுக்கு வரியைக் குறைக்கக் கோரிக்கை வந்த நிலையில் 66 பொருட்களுக்கு வரி விகிதத்தைக் குறைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின் மருந்துக்கு வரி 12 விழுக்காட்டில் இருந்து ஐந்து விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

பள்ளிப் புத்தகப் பைகள் மீதான வரி 28 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. நூறு ரூபாய்க்கு மேல் உள்ள திரைப்பட டிக்கெட்டுகளுக்கு 28 விழுக்காடு வரியே நீடிக்கிறது. அதேநேரம் நூறு ரூபாய்க்குக் குறைவான திரைப்பட டிக்கெட்டுகளுக்கு வரி 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி குழுவின் அடுத்த கூட்டம் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: