ஜூன் 12ம் தேதியான இன்று பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் 6வது ஆண்டாக வறட்சி தொடர்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
காவிரி ஆறு கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் வறண்டு காணப்படுகிறது. காவிரி நடுவர் மன்றம் அமைக்கும் முன்பு தமிழகத்தில் 28 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த சாகுபடியின் பரப்பளவு 14 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது.
ஆனால் கர்நாடகாவோ 6 லட்சம் ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பை 18 லட்சம் ஏக்கர் வரை உயர்த்திகொண்டது. தமிழகத்திற்கு போதிய நீர் பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், ஜுன் 12ம் தேதியான இன்று 6வது ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் முடிங்கியுள்ளன. ஏர் உழுது நாற்று நடவேண்டிய விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போய்
உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பயிர்கள் கருகி சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பு ஏற்பட்டும் தற்கொலை செய்தும் உயிரிழந்தனர். இதில் 17 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்ததாகவும் மற்றவர்கள் வேறு காரணங்களுக்காக உயிரிழந்தாகவும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.
இதனிடையே, இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படாததால், பிழைப்பு தேடி இடம்பெயர வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே, மத்திய மாநில அரசுகள் உரிய நடடிக்கை எடுத்து, கர்நாடகாவிடம் தண்ணீர் பெற்று தரவேண்டும் என்றும், டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா பகுதி பாசனத்திற்கு மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் தமிழக விவசாயிகள்.