திங்கள், 12 ஜூன், 2017

செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது வழக்குப்பதிவு June 12, 2017

செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது வழக்குப்பதிவு


சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அத்துமீறி நுழைந்து வீடியோ பதிவு செய்ததாக, ஆங்கில் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர் தங்கையன் சார்பில், தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், போயஸ் கார்டன் இல்லத்தில் அத்துமீறி நுழைந்த ஆங்கில தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் தங்களை மிரட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில், செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளர் சார்பில் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், போயஸ் கார்டன் இல்லத்தில் பணியாற்றி வரும் தனியார் நிறுவன பணியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்களின் அடையாளம் பற்றி குறிப்பிடப்படவில்லை.