செவ்வாய், 13 ஜூன், 2017

ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பட்டியலை வெளியிட இலங்கை அரசு முடிவு! June 13, 2017




இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், கடந்த 2009ம் ஆண்டு, மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரில், பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச தமிழ் சமூகத்தினர் வீடியோ ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இறுதிக்கட்டப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் சரணடைந்தனர்.

இவர்களில் பல ஆயிரக்கணக்கானோரின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத காரணத்தால், உறவினர்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், தற்போது அதிபராக இருக்கும் மைத்ரிபால சிறிசேனா, இறுதிக்கட்டப் போரில் ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பட்டியலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். 

Related Posts: