வியாழன், 15 ஜூன், 2017

மாட்டிறைச்சி உண்பவர்களை தூக்கிலிடக் கோரும் இந்துத்வ அமைப்பு June 15, 2017

மாட்டிறைச்சி உண்பவர்களை அரசு தூக்கிலிட வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாத்வி சரஸ்வதி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் நடைப்பெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் உரையாற்ற வந்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நட்சத்திர பேச்சாளர் சாத்வி சரஸ்வதி, மாட்டிறைச்சி உண்பவர்களை அரசு தூக்கிலிட வேண்டும் என்று கூறினார்.

இந்த காலக்கட்டத்தில் இந்து அல்லாத பிற மத ஆட்களை இந்துவாக மாற்றுவதைவிட, முதலில் இந்து  மக்களை சுத்த இந்துவாக மாற்றுவதே கடினமான செயல்” என்று  கூறினார். மேலும் தொடர்ந்த அவர், மாட்டிறைச்சி உண்பது பற்றி பேசுகையில், “மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். மாட்டிறைச்சி உண்பவர்களை அரசு தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். மாடுகளை பாதுகாப்பது நம் கடமை என் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். 

Related Posts: