வியாழன், 15 ஜூன், 2017

சென்னையில் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை! June 15, 2017

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு, மத்திய அரசு எந்த இடத்தைத் தேர்வு செய்தாலும் தமிழக அரசு வரவேற்கும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் எந்த பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் அன்பழகன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , வளர்ச்சியடையாத மாநிலத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு பதிலாக வளர்ச்சி அடைந்த மாநிலமான தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா என தெரிவித்தார்.

இதற்காக செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் பெருந்துறை பகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதனை மத்திய சுகாதார துறை , குழு அமைத்து நேரில் ஆய்வு செய்ததாகவும் கூறினார். மேலும் மத்திய அரசு எந்த இடத்தை தேத்வு செய்தாலும் தமிழக அரசு வரவேற்கும் என்றும் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டைக்கும் - மாமல்லபுரத்திற்கும் இடையே அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்க உரிய கருத்துரு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , விரிவாக்கப்பட்ட சென்னையின் பகுதியான சோழிங்கநல்லூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதேபோல் ஈஞ்சம்பாக்கத்தில் விபத்துகால அவசர சிகிச்சைகளுடன் கூடிய மருத்துவமனையை கட்ட அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Related Posts: