வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ராஜஸ்தான் மாநில அமைச்சர் கலந்து கொண்ட தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களே குப்பையை சாலையில் வீசிவிட்டு, பின்னர் அதை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பாஜக சார்பில் நேற்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார பணிகள் நடைபெற்றன. இதில், ராஜஸ்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் கிரண் மகேஸ்வரி கலந்து கொண்டு சாலைகளில் கிடந்த குப்பையை அகற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அமைச்சர் வருகையை முன்னிட்டு, நகராட்சி சார்பில் முன்னரே குப்பைக்கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்தன. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சேகரிக்கப்பட்ட குப்பைக்கழிவுகளை வேண்டுமென்றே சாலையில் வீசி, பின்னர் அவற்றை மீண்டும் அகற்றினர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.