வியாழன், 15 ஜூன், 2017

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திரா! June 15, 2017

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திரா!


பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 36 அடி உயரத்தில் புதிய தடுப்பணையை கட்டி வருவதால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அருகே உள்ள புல்லூர் பகுதியில் பாலாறு தொடங்கி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. இந்த பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ஏற்கனவே 32 தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில், வாணியம்பாடி, கங்குந்தி அருகில் உள்ள பாலாறு கிராமத்தில் தற்போது 50 அடி உயரத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

50 அடி உயரத்திற்கு மேம்பாலம் அமைவதால் கீழே சுமார் 36 அடி உயரத்துக்கு பாலத்தின்கீழ் தடுப்பணை போல் அமைத்து தண்ணீரை தேக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. ஆந்திர அரசு நூதன முறையில் மேம்பாலம் என்ற பெயரில் புதிய தடுப்பணை அமைப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Related Posts: