வியாழன், 22 ஜூன், 2017

ஹோண்டாவையும் விட்டுவைக்காத ரேன்சம் வைரஸ்! June 22, 2017

ஹோண்டாவையும் விட்டுவைக்காத ரேன்சம் வைரஸ்!


வான்னாக்ரை (Wannacry) வைரஸ் பிரச்னை இன்னும் ஓய்ந்தபாடில்லை. ரேன்சம்வேர் வைரஸ் தாக்கியதில் சியாமாவில் உள்ள ஹோண்டா மோட்டார் நிறுவனத்தின் ஆலை ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டது. ஆலையில் உள்ள கணினி நெட்வொர்க்கில் ரேன்சம்வேர் வைரஸை கண்டுபிடித்து அழித்த பின்னர் ஆலை உற்பத்தி செவ்வாயன்று மீண்டும் தொடங்கியது.

ஒரு நாளுக்கு 1000 கார்களை தயாரிக்கும் சியாமாவில் அமைந்துள்ள ஹோண்டா நிறுவன தொழிற்சாலை, இந்த வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பித்து போனது.

மே மாதத்தில் இங்கிலாந்தின் NHS மருத்துவமனை கணினி நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்ட போது WannaCry ransomware அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது விரைவில் உலகம் முழுவதும் பரவி, 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தியது மட்டுமின்றி பிரஞ்சு கார் தயாரிப்பு நிறுவனம் ரெனோ மற்றும் FedEx போன்ற நிறுவனங்களையும் தாக்கியதால் பெரிய அளவில் பேசப்பட்டது. 

இந்த ரேன்சம்வேர் ஆனது NSA வால் வெளியிடப்பட்ட விண்டோஸ் வல்னரெபிலிட்டி எனப்படும் வைரஸ் ப்ரோகிரேம் மூலம் விரைவில் நெட்வொர்க்குகளை தாக்கி பல நாடுகளுக்கு பரவியது. பின்னர் ஷாடோ தரகர்கள் என்ற ஹேக்கிங் குழுவால் திருடப்பட்டு வெளியிடப்பட்டது. ஒரு வட கொரிய குழுவிற்கு பின்னால் இருந்த WannaCry, மைக்ரோஸாஃப்ட்டின் அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டமையும் பாகுபாடின்றி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Related Posts: