குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் அமைச்சர் குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதாதள் தலைவர் லாலு பிரசாத், திமுக எம்பி கனிமொழி உட்பட 17 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஒருமணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பிறகு குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரை பொதுவேட்பாளராக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் மகள் மீரா குமார், காங்கிரஸ் சார்பில் 5 முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாஜக தரப்பில் தலித் பிரிவை சேர்ந்த ராம்நாத் கோவிந்தை நிறுத்தியதற்கு பதிலடியாக எதிர்க்கட்சிகள் தரப்பிலும் அதேப் பிரிவை சேர்ந்த மீராகுமார் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது