திங்கள், 27 மே, 2019

அதிமுகவில் இருந்து கொண்டு நோட்டாவுக்கு வாக்களித்த நடிகர் ஆனந்த் ராஜ்! May 27, 2019

Image
தற்போது வரை அதிமுக தொண்டனாக இருப்பதாகவும், விரைவில் அரசியல் பணியை தொடங்க உள்ளதாகவும்  
நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார். 

 
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆனந்த் ராஜ், தேர்தலின் போது இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என தான் கூறியதை சுட்டிக்காட்டினார். தான் நோட்டாவுக்கு வாக்களித்ததாகவும், நோட்டாவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்தார்.
தமிழக மக்களை மாற்றான் தாய் வீட்டு மக்களாக பார்க்காமல் பிரதமர் மோடி செயல்பட வேண்டும் என தெரிவித்த ஆனந்த் ராஜ், 5 ஆண்டுகள் நடக்கவுள்ள பாஜக ஆட்சியில் மக்களுக்கு வழங்க உள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி பெற்ற வாக்குகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஆனந்த்ராஜ்,. அதிமுகவிற்கு ஏற்பட்ட தோல்வியால் தனக்கு பாதிப்பு இல்லை என கூறினார். பாமகவிற்கு வழங்கப்பட்ட 
சீட்டை அதிமுக வாபஸ் வாங்க வேண்டும் எனவும் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார். 

Related Posts: